மணிப்பூர் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை...!!

மணிப்பூர் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை...!!
Published on
Updated on
1 min read

மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரண உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

மணிப்பூரில் மைத்தேயி - குக்கி இன மக்களுக்கிடையே நடைபெற்று வரும் மோதல் கலவரமாக மாறியுள்ள நிலையில் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது.  அக்கலவரத்தில் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள  நிலையில், தமிழர்களின் வீடுகள் உட்பட 1700-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மியான்மர் எல்லையில் உள்ள, தமிழர்கள் அதிகம் வாழும் மோரே பகுதியில் கலவரம் உச்சத்தை அடைந்துள்ளது. கலவரத்தில் தமிழர்களுக்கு உயிரிழப்பு இல்லை என்பது நிம்மதியளிக்கிறது. அதேநேரத்தில் 40-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களின் வீடுகள் எரிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் வாழ்வதற்கு வழியின்றி தவிக்கின்றனர்.  உணவுக்கும், குடிநீருக்கும் கூட வழியில்லாமல் வாடுகின்றனர்" என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகின் எந்த மூலையில் தமிழ் சொந்தங்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உதவ வேண்டிய பெருங்கடமை தமிழக அரசுக்கு உண்டு. மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு போதிய  பாதுகாப்பையும், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கலவரத்தில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக நிதி உதவி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com