சாலையில் படுத்து உருண்ட முதியவர்...செய்வதறியாது நின்ற போலீசார்...சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

சாலையில் படுத்து உருண்ட முதியவர்...செய்வதறியாது நின்ற போலீசார்...சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!
Published on
Updated on
1 min read

திருத்தணியில் மது போதையில் சாலையில் படுத்துக்கொண்டு போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி பகுதியை சோ்ந்தவர் மூன்று சீட்டு என்கிற குப்பன். இவர் ஒரு காலத்தில் அப்பகுதியில் பெரிய ரவுடியாக இருந்து வந்துள்ளார். ஆனால், தற்போது வயதாகி விட்டதால் ரவுடிசத்தை நிறுத்தி விட்ட குப்பன்,  முழு நேர போதையில் இறங்கிவிட்டார். அதன்படி, தொடர்ந்து காலை முதல் இரவு வரை முழுநேரமும் மது போதையில் மிதந்து வரும் குப்பன், நேற்றைய தினம் வழக்கம்போல் குடித்துவிட்டு, அதிதபோதையில் திருத்தணி அரக்கோணம் சாலையில் கீழே படுத்து உருண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். 

குப்பனின் ரகளையை கண்ட போக்குவரத்து போலீசார், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், போதையில் தன்னையே மறந்து ரகளையில் ஈடுபடும் குப்பன் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, தகவலறிந்து வந்த போலீசாா் குப்பனை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினா். 

இருப்பினும், குப்பன் மீண்டும் வந்து சாலையில் படுத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டதால், போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். ஆனால், பாவம் குப்பனின் ரகளையால் அப்பாவி வாகன ஓட்டிகள் மட்டும்தான் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com