ஆளுநர் பதவி காலாவதியான ஒன்று...எம்.பி கனிமொழி அதிரடி!

ஆளுநர் பதவி காலாவதியான ஒன்று...எம்.பி கனிமொழி அதிரடி!

ஆளுநர் என்ற பதவி இல்லையென்றால் ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்க முடியும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

காலாவதியான சட்டம்:

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் விளக்கம் கேட்டு காலம் தாழ்த்தி வந்ததால் தற்போது அவசர சட்டம் காலாவதியானது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: காலம் தாழ்த்திய ஆளுநர்...கண்டனம் தெரிவிக்கும் டிடிவி!

கேள்வி எழுப்பிய கனிமொழி:

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் காலாவதியான நிலையில், இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, ஆளுநர் பதவி என்பது ஒரு காலாவதியான விஷயம். அந்த பதவி இல்லாமல் இருந்தாலே ஆன்லைன் ரம்மியை ஒழித்து இருக்க முடியும் எனவும், பல சிக்கல்கள் தீர்ந்து விடும் எனவும் கூறினார். ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க ஏன் துடிக்கிறார்கள் என தெரியவில்லை எனவும் கனிமொழி கேள்வி எழுப்பினார்.