சிங்கப்பூர் மாடலில் கலைஞர் பூங்கா!

சிங்கப்பூர் மாடலில் கலைஞர் பூங்கா!
Published on
Updated on
1 min read

25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா சிங்கப்பூரில் உள்ள பூங்கா வடிவத்தில் உருவாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். சென்னை செம்மொழி பூங்கா அருகே காத்ட்ரல் சாலையில் மீட்கப்பட்ட 6.09 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்காவை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே தோட்டக்கலை துறை மூலம் 6.3 ஏக்கர் கொண்ட செம்மொழிப் பூங்காவை தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. இதற்கு எதிரேவுள்ள இடத்தில் தான் கலைஞர் நூற்றாண்டு பூங்கா உருவாக்கப்பட உள்ளது.

செம்மொழிப் பூங்காவையும் விரைவில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவையும் இணைக்கக் கூடிய வகையில் இணைப்பு பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கலாமா என்பது குறித்து தோட்டக்கலை துறை சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் உள்ள பூங்கா மாதிரியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்பது தொடர்பாக சாத்தியக் கூறு ஆய்வு நடைபெற்று வருகிறது. இதன் பின்பு சாத்தியக் கூறு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பிக்கவும்  திட்டமிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com