ரிஷி சுனக்கிற்காக சிறப்பு டூடூலை வெளியிட்ட அமுல்...!!!

ரிஷி சுனக்கிற்காக சிறப்பு டூடூலை வெளியிட்ட அமுல்...!!!

இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக் குறித்து இங்கிலாந்தை விட இந்தியாவில் அதிகம் பேசப்படுகிறது.  சுனக்கிற்கு இந்தியாவின் அனைத்து மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இதில் பிரதமர் நரேந்திர மோடி முதல் பல தேசத் தலைவர்களும் அடங்குவர். 

இப்போது பால் தயாரிப்பு நிறுவனமான அமுலும் ரிஷி சுனக்கை தனித்துவமான முறையில் வாழ்த்தியுள்ளது.  அமுல் எப்போதுமே அதன் ஆக்கப்பூர்வமான டூடுல்களுக்கு பெயர் பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  

அரசியல் நிகழ்வுகள், திருவிழாக்கள், விளையாட்டுகளில் நடந்த சிறப்பு நிகழ்வுகளின் டூடுல்களைப் சிறப்பு சந்தர்ப்பங்களில், அமுல் எப்போதும் பகிர்ந்து கொள்கிறது. இந்த முறையும் அதையே தான் செய்துள்ளது. அமுல் அதன் சொந்த ஸ்டைலில் சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.  

அமுல் சமூக ஊடகங்களில் ஒரு சிறப்பு டூடுலைப் பகிர்ந்துள்ளது.  ரிஷி சுனக்கின் உருவம் பொறித்த சிறப்பு டூடூலை வெளியிட்டுள்ளது அமுல். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:     ”இந்தியாவின் பன்முகத்தன்மையையும் முஸ்லிம்களின்...” பாஜகவை விமர்சித்து கண்டனம் தெரிவித்த AIMIM தலைவர் ஒவைசி!!!