ஏழை, எளிய மக்களுக்கு பிரதமர் மோடி புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் செவ்வாய் முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய விவாதத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றினார். இதையடுத்து மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமித் ஷா, எதிர்கட்சிகளின் தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார்.
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பிரதமர் மோடி புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக கூறிய அமித் ஷா, மக்களுக்காக சோர்வில்லாமல் உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்திய விடுதலைக்குப் பிறகு பிரதமர் மோடி தலைமையிலான அரசு மட்டும் தான் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார். ஊழல், குடும்ப அரசியலை மோடி விரட்டியடித்ததாக கூறிய அமித் ஷா, வாக்கு அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருவதாக விமர்சித்தார்.