பொருளாதார பின்னடைவு காரணமாக 18000 ஊழியர்களை பணியில் இருந்து விடுவிடுவிக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமேசான் நிறுவனம் எடுத்த முடிவு:
சர்வதேச அளவில் அமேசான் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற பொருளாதாரச்சூழல் மற்றும் பொருளாதார மந்த நிலையால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10,000 ஊழியர்களை பணியிலிருந்து அமேசான் நிறுவனம் விடுவித்தது. தொடர்ந்து 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேலும் பலரை விடுவிக்க இருப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில் ஏற்கனவே தெரிவித்திருந்தபடி, பொருளாதார பின்னடைவு காரணமாக 18000 ஊழியர்களை பணியில் இருந்து விடுவிடுவிக்க முடிவு செய்து அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஸ்ஸி, 18000 பேரை பணியிலிருந்து விடுவிப்பது ஊழியர்களை வெகுவாக பாதித்தாலும் கடின மனதோடு இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அமேசான் நிறுவனம் எடுத்த இந்த அதிரடி முடிவு ஊழியர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.