மும்பைக்கு படையெடுக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள்...!

மும்பைக்கு படையெடுக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள்...!
Published on
Updated on
1 min read

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மும்பைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். 

அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள்  ஓரணியில் திரண்டுள்ளன. இந்த நிலையில் இந்தியா கூட்டணியின்  3 வது ஆலோசனை கூட்டம்  மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் உள்ள தனியார் விடுதியில்  இன்றும், நாளையும் நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். அவருடன் திமுக எம்.பி.  டி.ஆர் பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றனர். 

இதேபோல் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மும்பையில் முகாமிட்டுள்ளனர். அவர்களை வரவேற்று மும்பையில் பேனர்கள் மற்றும் கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com