என்னை விட அஜித்-தான் ரொம்பவும் ஸ்வீட் - மஞ்சுவாரியர்!

என்னை விட அஜித்-தான் ரொம்பவும் ஸ்வீட் - மஞ்சுவாரியர்!

துணிவு படம் குறித்து பேசிய நடிகை மஞ்சுவாரியரின் பேட்டி சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

துணிவு:

பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ளது “துணிவு” திரைப்படம். பொங்கலை முன்னிட்டு  வரும் 11 ஆம் தேதி வெளியாகவுள்ள “துணிவு” திரைப்படத்தை  போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார்.

மஞ்சுவாரியர் எண்ட்ரீ: 

அசுரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரீ கொடுத்த மஞ்சு வாரியர், துணிவு படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். இந்நிலையில் துணிவு படத்தில் நடித்தது குறித்து நடிகை மஞ்சுவாரியர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டி சமீபத்தில் வெளியானது.

இதையும் படிக்க: தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன? 

அஜித்  ரொம்பவும் இனிமையானவர்:

அதில், எச்.வினோத் இயக்கத்தில் நடித்தது மிக சிறப்பாக இருந்தது என்றும், அவர் படங்களை நான் விரும்பி பார்ப்பேன் என்றும் மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, நீங்கள் இனிமையானவரா என நிரூபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த மஞ்சுவாரியர், தன்னை விடவும் அஜித்  ரொம்பவும் இனிமையானவர் என்றும், அவருக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை என்றும் கூறினார். மேலும் துணிவு படத்தின் படப்பிடிப்பின்போது துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு அஜித்திடம் தான் உதவி கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த படத்தில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் நடிக்க வேண்டி இருந்ததால் அந்த அனுபவம் எல்லாம் புதியதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.