ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா திருவண்ணாமலையில் சாமி தரிசனம்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்து வழிப்பட்டார்.

ரஜினிகாந்தின் மகள்  ஐஸ்வர்யா   திருவண்ணாமலையில் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அதனை தொடர்ந்து பக்தர்கள் வழிபட்டு சென்றனர் இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்தார் அதன் பின்னர் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு ஒரு மணி நேரம் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் கலந்து கொண்டு சாமி வழிபட்டார்.

மேலும் படிக்க | வங்கி மோசடி வழக்கு: நீடிக்கப்பட்ட கோச்சர்களின் நீதிமன்ற காவல்

அதன் பின்னர் கோவில் சார்பில் ஐஸ்வர்யாவிற்குமாலை அணிவிக்கப்பட்டுபிரசாதம் வழங்கப்பட்டது மேலும்  நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா  புதியதாக எடுக்கும்  படமான லால் சலாம் படத்துக்காக சிறப்பு பூஜை செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளது இந்நிலையில் நடிகர்ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா கோயிலுக்கு வந்து அறிந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் செல்பி போட்டோ எடுத்துக் கொண்டனர்.

மேலும் படிக்க | திமுக அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யவில்லை என சாலை மறியல் - போலீசார் கைது


முன்னதாகவே திருவண்ணாமலைக்கு வருகை தந்த ஐஸ்வர்யா இரவில் கிரிவல வந்த வழிபட்டார்