"27 ஆண்டுகளுக்குப் பிறகு  ஜூன் மாதத்தில் கனமழை" தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு!

"27 ஆண்டுகளுக்குப் பிறகு  ஜூன் மாதத்தில் கனமழை" தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கனமழை பெய்து வருவதாகவும் இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் பலப் பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வந்த மழையானது நேற்று இரவு கனமழையாக மாறி, தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த மழையானது வரலாறு காணாத மழை எனவும் கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு இதற்காக ஜீன் மாதத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் ஜூன் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்தாக குறிப்பிட்டுள்ள அவர், சென்னையில் பல பகுதிகளிலும்,  அடையாறு போன்ற தென் சென்னையில் உள்ள சில பகுதிகளிலும் 150 மி.மீ. மழை பொழிந்துள்ளதை நினைவில் கொள்ளுமாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

1991, 1996க்கு பிறகு இப்போதுதான் 2023ல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல பகுதிகளில் ஜூன் மாதத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இது மேகக்கூட்டங்களின் மோதல்களால் ஏற்படும் இடிமின்னல் மழை அல்ல. மாறாக, கடலில் இருந்து தரையை நோக்கி நகரும் மேகக் கூட்டங்களால் இந்த மழை பெய்து வருகவதாக தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் தொடக்கத்தில் பெய்த வரலாறு காணாத வெப்பத்துக்குப் பிறகு, இதுபோன்ற மழையின் வாயிலாக இயற்கை ஈடுசெய்கிறது. இப்போதும் கூட கடலில் தரைநோக்கி இடம் பெயரும் மேக மூட்டத்தால் மழை பெய்வது நம்ப முடியாத கனவாக உள்ளது என தெரிவித்துள்ள அவர், 1996க்குப் பிறகு இந்த ஆண்டில்தான் ஜூன் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 1996ல் பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் விடுமுறை கிடைத்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com