பாஜக கூட்டணிக்கு சவால் விடுத்த ஆதித்யா!!!என்ன சவால்??!!

பாஜக கூட்டணிக்கு சவால் விடுத்த ஆதித்யா!!!என்ன சவால்??!!
Published on
Updated on
2 min read

துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்:

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸும் உத்தவ் தாக்கரேவை தாக்கி பேசியுள்ளார். சிவசேனாவில் ஏற்பட்ட பிளவுக்கு அவரது செயல்பாடுதான் காரணம் என்றார். தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவாரை நம்பியது மிகப்பெரிய அரசியல் தவறு என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் முதுகில் குத்தியதற்கு பழிவாங்க, அந்த நபர் நீண்ட காலம் வாழ வேண்டியது அவசியம் என்று அவர் கூறியுள்ளார். 

2019 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலத்தின் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் ஃபட்னாவிஸும், பவாரும் பதவியேற்றனர். இருப்பினும், பவார் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அவரது அரசாங்கம் 80 மணி நேரத்திற்குப் பிறகு இல்லாமல் போனது. 

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய அரசியல் கொந்தளிப்புக்கு உத்தவ் தாக்கரேவை மட்டுமே குற்றம் சாட்ட வேண்டும் என்றும், சிவசேனாவில் ஏற்பட்ட பிளவுக்கு அவரது செயல்பாடே காரணம் என்றும் ஃபட்னாவிஸ் கூறியுள்ளார். 

ஏன் முதுகில் குத்தினீர்கள்:

முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே சவால் விடுத்துள்ளார். ஒரு நிகழ்வில், ஆதித்ய தாக்கரே, வரவிருக்கும் புனே கார்ப்பரேசன் தேர்தலில் வீடுகள், தரமான கல்வி, சுகாதாரம், சாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகிய பிரச்சினைகளை சிவசேனா சரிசெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். 

ஷிண்டே குழு எம்எல்ஏக்களிடம் சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே, ”நாங்கள் உங்களுக்கு அனைத்தையும் கொடுத்தோம், ஏன் எங்களை முதுகில் குத்தினீர்கள்” என கேட்டுள்ளார்.

ஷிண்டே அணிக்கு சவால்:

ஷிண்டே குழுவும் பாஜகவும் உடனடியாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ஆதித்ய தாக்கரே சவால் விடுத்தார். ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் மக்களின் முடிவை நாங்கள் ஏற்போம் எனவும் ஆதித்ய தாக்கரே சவால் விடுத்துள்ளார்.  இப்போது புனே கார்ப்பரேசன் தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் ஆதித்ய தாக்கரே.  கொரோனா தொற்றின் போது நகரத்திற்காக நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்குத் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக குடிமை அமைப்பில் ஆட்சி செய்து வரும் சிவசேனாவுக்கு எதிராக வரவிருக்கும் புனே கார்ப்பரேசன் தேர்தலில் பாஜக ஆக்ரோஷமான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com