மீண்டும் லேடி சூப்பர் ஸ்டாரை சீண்டிய நடிகை மாளவிகா.....

மீண்டும் லேடி சூப்பர் ஸ்டாரை சீண்டிய நடிகை மாளவிகா.....

Published on

நடிகைகளை லேடி சூப்பர் ஸ்டார் என அழைப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என மீண்டும் நயன் தாராவை சீண்டியுள்ளார் நடிகை மாளவிகா. 

தமிழில் பேட்ட, மாஸ்டர்,  மாறன் போன்ற படங்கள் மூலம் பிரபலமான நடிகை மாளவிகா.  நடிகை மாளவிகாஅவர் பங்கேற்ற ஒரு நேர்காணலில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர்கள் மருத்துவமனை சீன்களில் கூட மேக்கபுடன் காணப்படுவது ஏற்புடையதாக இல்லை எனக் கூறியிருந்தார்.  இதற்கு பதிலளிக்கும் வகையில் நயன்தாரா ஒரு நேர்காணலில் அவரது விமர்சனமான கேள்விக்கு தகுந்த பதிலளித்திருந்தார்.  

இந்த நிலையில், தற்போது நடைபெற்ற ஒரு நேர்காணலில் மீண்டும் நடிகை நயன்தாராவை சீண்டும் விதமாக பேசியுள்ளார் நடிகை மாளவிகா.  அதாவது, கத்ரீனா கைப், ஆலியா பட், தீபிகா படுகோனே போன்ற நடிகைகளை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைப்பதில்லை.  மேலும்,அதில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com