சிம்புவின் பாடலுக்கு வாய் அசைக்க போகும் நடிகர் விஜய்??

சிம்புவின் பாடலுக்கு வாய் அசைக்க போகும் நடிகர் விஜய்??

வாரிசு பொங்கல்

நடிகர் விஜயின் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதை அடுத்து, அவரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். சமீப காலமாக சினிமா ரசிககர்களிடையே அதிகமாக உச்சகரிக்கப்படும் பெயர் வாரிச.. வாரிசு.. வாரிசு..! இதனையடுத்து கடந்த சில மாதங்களாகவே பர்ஸ்ட் லுக், போஸ்டர், சிங்கிள் என தொடர்ந்து தனது படத்திற்காக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது படக்குழு.

Varisu: Ranjithame Song From Thalapathy Vijay & Rashmika Mandanna Starrer  Takes Internet By Storm!

ஹே! ரஞ்சிதமே.. ரஞ்சிதமே..

கடந்த நவம்பர் 5ஆம் தேதி வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே, ரஞ்சிதமே பாடல் நடிகர் விஜய் மற்றும் பாடகர் மானசி குரலில் வெளியானது. இப்பாடல் வெளிவந்த சில நாட்களிலேயே 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது. கதாநாயகன் விஜயும், கதாநாயகி ராஷ்மிகாவும் ரஞ்சிதமே பாடலின் லிரிக்கள் வீடியோவில் வண்ண வண்ண உடைகளில் காட்சியளித்து குழந்தைகளின் மனதை ஈர்த்துள்ளனர்.

Vijay-Starrer Thalapathy66 May Be Titled Vaarasadu in Telugu, Vaarisu in  Tamil

கதாநாயகியான ரசிகை 

நடிகர் நாகர்ஜுனா மற்றும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த தோழா படத்தின் இயக்குனர் வம்சி படிப்பள்ளியின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் வாரிசு. இப்படத்தில் முதல் முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜயுடன் ஜோடி சேர்கிறார். இதைப் பற்றி ராஷ்மிகா கூறுகையில், நடிகர் விஜயுடன் ஜோடியாக நடிப்பது என்னுடைய பெரிய ஆசை என்றும், அது இப்போது நிறைவேறிவிட்டது என்றும் கூறினார். தொடர்ந்து விஜயை சந்தித்த போது, இது எனக்கு பேஃன் கேர்ள் மொமெண்ட் (Fan Girl Moment) என்றும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

மேலும் படிக்க: பண மோசடி வழக்கு !!! திரைப்பட காமெடி நடிகர் சூரி மீண்டும் நேரில் ஆஜர்..!

Simbu thanks Vijay for his moral support to Vaalu Tamil Movie, Music  Reviews and News

சிம்பு குரலில் விஜய்

வாரிசு படத்திற்கு இசை அமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் பாடல் வெளிவந்து வரவேற்பை பெற்றுள்ளது. வாரிசு படத்தில் நடிகர் சிம்புவும், விஜய்க்காக ஒரு பாடலை பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீப காலமாக சிம்பு பாடும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களாகி வருகிறது. அமைந்துவரும் இந்நிலையில் விஜய்க்காக சிம்பு பாடவுள்ளது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.