25 - வது படத்தில்....! மீண்டும் கலக்க தயாராகும் வந்தியத்தேவன்...!

25 - வது படத்தில்....! மீண்டும் கலக்க தயாராகும் வந்தியத்தேவன்...!
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்தி சர்தார் படத்தை தொடர்ந்து, தற்போது 25 - வைத்து படத்தில் நடிக்க உள்ளார். திரைப்பயணத்தில் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கி தற்போது கதாநாயகனாக கோலிவுட்டை கலக்கிக்கொண்டிருக்கிறார். 

சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு உருவான இந்த படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தது. அதனை தொடர்ந்து சர்தார் படத்தில் நடித்து வெற்றிகண்டார். 

இதனை தொடர்ந்து தற்போது 25- வது படத்தில் நடிக்க உள்ளார். 'சகுனி', 'காஷ்மோரா', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கைதி', 'சுல்தான்' என 5 சூப்பர்ஹிட் திரைப்படங்களைத் தொடர்ந்து 6-வது முறையாக கார்த்தியின் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. 'ஜப்பான்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது.  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, ராஜு முருகன் இயக்கத்தில் 2016ல் வெளிவந்து தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்ற படம் 'ஜோக்கர்'. தற்போது மீண்டும் இதே கூட்டணி 'ஜப்பான்' மூலம் மீண்டும் இணைகிறது. 


 ஜப்பான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் முதல் முறையாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். 25 வருடங்களாகத் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், 'கோலி சோடா', 'கடுகு' ஆகிய திரைப்படங்கள் மூலம் இயக்குநராகவும், தனக்கென ஒரு பிரத்யேக அடையாளத்தை உருவாக்கியுள்ள விஜய் மில்டன், 'ஜப்பான்' திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 2020ஆம் ஆண்டின் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்ற ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 
மாநகரம், கைதி, டாணாக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்புப் பொறுப்பினை ஏற்றுள்ளார். தேசிய விருது வென்ற வினீஷ் மங்கலான் இந்தப் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

'ஜப்பான்' படத்தின் பூஜை இன்று காலை சினிமா பிரபலங்கள் வாழ்த்த, சிறப்பான முறையில் நடைபெற்றது. விரைவில் தூத்துக்குடியில் முதல் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தின் முன் தயாரிப்பு, திட்டமிடல் பணிகளை நீண்ட நாட்களாக மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன். ரசிகர்களின் எதிர்பார்ப்பை 'ஜப்பான்' கண்டிப்பாக பல மடங்கு விஞ்சும் என்ற நம்பிக்கையுடன் வேலைகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com