”பருத்திவீரன்” திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு காலமானார்...!

”பருத்திவீரன்” திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு காலமானார்...!
Published on
Updated on
1 min read

பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்த செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த செவ்வாழை ராசு, பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து வந்தார்.

கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் செவ்வாழை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் செவ்வாழை ராசு என்று அழைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், மைனா, கிழக்குச் சீமையிலே, கந்தசாமி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

இந்நிலையில் 70 வயதான நடிகர் செவ்வாழை ராசு, சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இன்னும் சற்று நேரத்தில் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு, அவரது உடல் எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com