மின் கட்டண உயர்வுக்கு யார் காரணம் தெரியுமா? அமைச்சர் பகீர்!

மின் கட்டண உயர்வுக்கு யார் காரணம் தெரியுமா? அமைச்சர் பகீர்!

மின் கட்டண உயர்வுக்கு காரணமான அதிமுக, அதை மறைத்து திமுக மீது பழி போட்டு வருவதாக அமைச்சர் அன்பரசன் குற்றம்சாட்டியுள்ளார். 

கடன் தள்ளுபடி ஆணை வழங்கும் விழா:

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக குறு, சிறு  மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதையும் படிக்க: புதுச்சேரி: புத்தாண்டுக்கு கடலில் இறங்க அனுமதி இல்லையா? காவல்துறை சொல்வது என்ன?

மின்கட்டண உயர்வுக்கு காரணம்?:

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு காரணம் அதிமுக தான். ஏனென்றால், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, மத்திய அரசு கொண்டுவந்த உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் தான் இன்று மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக அமைச்சர் தா. மோ. அன்பரசன் குற்றம்சாட்டினார்.

பழி போட பார்க்கும் அதிமுக:

எனவே, மின் கட்டணம் உயர்வுக்கு மிக முக்கிய காரணம் அதிமுக தான். ஆனால், அதை மறைத்து திமுக ஆட்சி மீது பழி போடவே அதிமுக போராட்டம் நடத்துவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் சாடினார்.