சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் செயற்குழு உறுப்பினர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்களான டி. ஜெயக்குமார் எஸ் பி வேலுமணி செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் செயற்குழு கூட்டத்தில் 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதேபோன்று கர்நாடக சட்டசபை தேர்தல் மற்றும் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் அவை தாசிரியர் தமிழ் மகன் உசேனுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உயர் ரக கார் ஒன்றை வழங்கினார்.
எங்கள் மேல் துரும்பை கொண்டு வீசினாலும் தூணைக் கொண்டு எறிவோம் : செல்லூர் ராஜு ஆவேச பேச்சு
கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை தொடங்கியவர்கள் அரசியலில் என்ன ஆனார்கள் என்று அனைவருக்கும் தெரியும் அத்வானி வைகோ , ராகுல் காந்தி கூட கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை தொடங்கினார் நல்ல மனிதர் தான் அவர் ஆனால் அவர் அரசியல் வாழ்வும் முடிந்து விட்டது இதுபோல் அண்ணாமலையும் கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை தொடங்குகிறார் அவர் அரசியலில் எங்க போக போக்கிரார் என்று தெரியவில்லை. அண்ணாமலை பேரணியில் பேசுவேன் என்று கூறியிருக்கிறார், பேரணியில் பேசும்போது அதற்கான பதிலடி நிச்சயமாக கொடுப்போம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எவன் பேசினாலும் பதிலடி தருவோம். எங்கள் மேல் துரும்பை கொண்டு வீசினாலும் தூணைக் கொண்டு எறிவோம். அண்ணாமலை புரட்சி பயணம் போகும் போது அதற்கான பதிலடி கொடுப்போம் என்று செல்லூர் ராஜு கூறினார்.