தேநீர் கடையில் திடீரென ஏற்பட்ட கேஸ் கசிவு ..விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்...

தேநீர் கடையில் திடீரென ஏற்பட்ட கேஸ் கசிவு ..விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்...

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தேநீர் கடையில் திடீரென ஏற்பட்ட கேஸ் கசிவினால் டீ மாஸ்டருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை அம்மையப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார் வயது 65. ஆயிரம் விளக்கு பகுதிக்கு உட்பட்ட ஆஷிஸ் முல்க் ஐந்தாவது தெருவில் உள்ள KPL தேநீர் கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று இரவு பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்புவதற்காக சுத்தம் செய்து கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிய தொடங்கியது.

 உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் போராடி தீயனைத்து தீக்காயம் ஏற்பட்ட டீ மாஸ்டர் பிரேம்குமாரை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தீக்காயம்  பிரிவில் 69 சதவீதத்துடன் டீ மாஸ்டர் பிரேம்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆயிரம் விளக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.