சர்வதேச யோகா தினத்தையொட்டி பல்வேறு மத்திய அமைச்சர்கள் ஆசனங்களில் ஈடுபட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஒரு நாய் யோகா செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று ஒன்பதாவது சர்வதேச யோகா தினம் உலகெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அங்கு நடக்கும் யோக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.
இன்று காலையில் குஜராத்தின் சூரத்தில் ஒரு லட்சம் நபர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும், டெல்லியில் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர். அருணாசலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சிலிகுரி ஆகிய பகுதிகளில் ராணுவத்தினர் ஆசனங்கள் செய்துள்ளனர். இந்நிலையில், இந்தோ திபெத்தியன் எல்லை போலீசார் ஜம்மு காஷ்மீரில் யோகா செய்யும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அவர்கள் யோகாசனம் செய்யும் போத அவர்களுடன் இணைந்து இந்தோ திபெத்தியன் எல்லை படையை சேர்ந்த மோப்பநாயும் யோகாசனம் செய்து அசத்தியது. எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து நாய் ஒன்று யோகாசனம் செய்த காட்சி இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிக்க:"நான் மோடியின் ரசிகன்" எலான் மஸ்க் புகழாரம்!