இந்தி திணிப்பு போராட்டத்திற்கான அறிக்கை...நாளை விவாதிக்கப்படும்...!

இந்தி திணிப்பு போராட்டத்திற்கான அறிக்கை...நாளை விவாதிக்கப்படும்...!
Published on
Updated on
1 min read

இந்தி திணிப்பு போராட்டத்திற்கான அறிக்கை, சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிறகு அலுவல் ஆய்வு கூட்டத்தை நடத்திய அப்பாவு, கூட்டத்தொடர் வருகிற 19ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்துள்ளார்.

அறிக்கைகள் விசாரணை:

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை மீண்டும் 10 மணிக்கு அவை கூடும் என்றும், கூட்டத்தில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கூடுதல் செலவினத்திற்கான வரவு செலவு திட்டத்தை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அதிமுக விவகாரம் பற்றி பேசிய அப்பாவு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் 4 கடிதங்களும், ஓ.பி.எஸ் தரப்பில் 2 கடிதங்களும் பெறப்பட்டுள்ளதாகவும், கடிதங்களுக்கான பதில் சட்டமன்றத்தில் மட்டுமே கூற முடியும் என்றும், கேள்வி எழுப்பப்பட்டால் பதிலளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com