
சென்னையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து, திமுக பிரமுகர் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில், சமீப காலமாக ஆளுநர் ஆர் என் ரவிவை விமர்சித்து, பல இடங்களில், பொது வெளிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, வருகிறது.
இந்நிலையில், மீண்டும் ஒரு விமர்சன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் எதிரில், ஆங்கிலத்தில் Get out Clown Ravi என்ற போஸ்டரை, திமுகவின் சட்டத்துறை இணை செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் ஒட்டியுள்ளார்.
அது போல, பல்வேறு பகுதிகளிலும் அவருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.