கலைஞர் மீது ஈர்ப்பு வீட்டின் முன்பு பேனா சின்னம்!!!

கலைஞர் மீது ஈர்ப்பு வீட்டின் முன்பு பேனா சின்னம்!!!

Published on

ஆதம்பாக்கத்தில் திமுகவை சேர்ந்த பிரபாகரன் என்பவரது இல்லம் கடந்த மாதம் புதிதாக கட்டிமுடிக்கபட்டது. ஆலந்தூர் அடுத்த ஆதம்பாக்கத்தில் மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவை போற்றும் வகையில் ரூபாய் 3 லட்சம் செலவில் 16 அடி உயரத்தில் பைபர் பேனா மாதிரி திமுகவை சேர்ந்த பிரபாகர் புதிய வீட்டின் முகப்பு பகுதியில் பொருத்தியுள்ளார். 

சமீபமாக கலைஞர் கருணாநிதியின் நினைவு சின்னமாக கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் சீமான் உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பிரபாகர் அவரது வீட்டில் பேனா நினைவு சின்னம் அமைத்தது திமுகவினரிடையே பேரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக  பேனா வடிவம் அமைக்க எதிர்ப்புகள் எழுந்த நிலையில் மக்கள் பலர் தினமும் பிரமுகர் வீட்டிற்க்கு வந்து செல்போனில் படம் பிடித்தும், செல்பி எடுத்தும் செல்கின்றனர். 

இது குறித்து வீட்டின் உரிமையாளர் திமுக பிரமுகர்  பிரபாகரனிடம் கேட்டபோது தலைவர் கலைஞர் அவர்களின் அன்பால் ஈர்க்கப்பட்டு கழகத்தில் இணைந்த பிறகு அவர் நம்மை விட்டு பிரிந்தார். என்பதால் நான் புதியதாக கட்டிய இல்லத்தின் முன்பு அவரது நினைவு சின்னமாக பேனா ஒன்றை வடிவமைத்தேன் இதுபோன்று தமிழகத்தின் மற்ற பல்வேறு பகுதிகளில் கோடி கணக்கான போனாக்கள் உதயமாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com