தமிழ்நாட்டின் புதிய தொடக்கம்....புதிய தலைமை....

தமிழ்நாட்டின் புதிய தொடக்கம்....புதிய தலைமை....
Published on
Updated on
1 min read

புத்தொழில் சார்ந்த செயல்பாட்டிற்கான தலைவர் என்ற அங்கீகாரத்தினை  மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா அமைப்பு தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது.

புதிய தொடக்கம்:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உலகத் தமிழ் முதலீட்டாளர்களையும் தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள குளோபல் தமிழ் ஏஞ்சல்ஸ் என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். 

அதிகரித்த முதலீடு:

தொடர்ந்து, விழாவில் பேசிய முதலமைச்சர், கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் புத்தொழிலுக்கான முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 15 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதாக கூறினார்.  இது 2021 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 70 சதவீதம் அதிகம் என்று கூறினார்.

கலந்துகொண்டோர்:

இந்த விழாவில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், தாமோ அன்பரசன், மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com