20 வயது இளைஞனிடம் துப்பாக்கி குண்டு...சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

20 வயது இளைஞனிடம் துப்பாக்கி குண்டு...சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
Published on
Updated on
1 min read

சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பையனிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு செல்லக்கூடிய விமானம் நள்ளிரவு 12 .50 மணியளவில் புறப்பட தயாராக இருந்தது. முன்னதாக பயணிகள் அனைவரையும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்த 20 வயது மதிக்கத்தக்க கௌரஷ் என்பவர் 9.62 mm அளவுள்ள துப்பாக்கிக் குண்டு வைத்திருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைப் பற்றி பயணியிடம் விசாரித்த போது, அமெரிக்காவில் துப்பாக்கி பயிற்சியின் பொழுது எனக்கு பரிசாக வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். இதனை அடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அந்த இளைஞரின் பயணத்தை ரத்து செய்துவிட்டு, அவரையும், அவர் வைத்திருந்த துப்பாக்கி குண்டையும் அங்கிருந்த விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்ததால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com