ரஜினி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி..! 'ஜெயிலர்' ரிலீஸ் தேதியை அறிவித்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்...!

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி..!  'ஜெயிலர்'  ரிலீஸ் தேதியை அறிவித்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்...!
Published on
Updated on
2 min read


நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் ' திரைப்படம் வருகிற ஆகஸ்ட்  10-ம் திதி வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாகத் தெரிவித்துள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கி, அனிருத் இசையில்  ரஜினிகாந்த், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சுனில்,  ஜாக்கிஷெராஃப், உள்ளிட்டு பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து  வெளியாக இருக்கும் இந்த  திரைப்படத்தை சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி 'பான் இந்தியா' திரைப்படமாக வெளியாக இருக்கிறது. சுதந்திர தின விடுமுறையை ஒட்டி  இப்படம் வெளியாகிறது. இவ்வாறிருக்க, ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த செய்தியை வரவேற்கின்றனர். 

நீண்ட நாட்களாக இந்த படத்தை குறித்த தகவல்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த ணியில், தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்டிருப்பது ரசிகர்களின் மத்தியில், பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

டாக்டர் படத்தின் வெற்றிக்கு  பிறகு இயக்குனர் நெல்சன் படைப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம் 'பீஸ்ட்' . இந்நிலையில் இளைய தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கிய இந்த அத்திரைப்படம் எதிர்பார்த்த அளவில் பெரிதும் வெற்றியை சந்திக்காத நிலையில், நெல்சன் மீது நெட்டிசன்கள் பல விமர்சனங்களை அள்ளி வீசினர்.   
அவரின் இயக்கம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் வலம்வந்தன. 

எனினும்,  சரியான கதைக்களத்தோடு மீண்டும் நெல்சன் தனது பயணத்தை தொடருவார் எனவும் சிலர் ஆதரவாக குரல் கொடுத்தனர். இவ்வாறிருக்க, தற்போது தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பெரிதளவில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

நெட்டிசன்களின் விமர்சனங்களைத் தவிடுபொடி ஆக்கி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நெல்சன் பூர்த்தி  செய்வாரா?... இல்லையா?... என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com