முகமற்ற முகமூடியா கார்கே...காங்கிரஸ் கூறுவதென்ன?!!!

முகமற்ற முகமூடியா கார்கே...காங்கிரஸ் கூறுவதென்ன?!!!

காங்கிரஸ் உறுப்பினர் குர்ஷித்தின் அறிக்கையை குறிப்பிட்டு பாஜகவின் சுதன்ஷு திரிவேதி காங்கிரசை விமர்சித்துள்ளார்.  காங்கிரஸ் அந்த கட்சியின் மூத்த தலைவர்களுக்கு துரோகம் செய்கிறது. 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை, அக்கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் கார்கே கட்சியின் முகம் அல்ல, முகமூடி மட்டுமே எனக் குறிப்பிட்டு பேசியதாகக் குற்றம் சாட்டியுள்ளார் பாஜக தலைவர் சுதன்ஷு திரிவேதி.  மேலும் திரிவேதி கூறுகையில் குர்ஷித்தின் கூற்றுப்படி பார்க்கையில் மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கட்சியின் பணிக்காக மட்டுமே என்பதும் உண்மையான தலைவர் காந்தி குடும்பத்தை சார்ந்தவர்களே என்பதும் தெளிவாகிறது எனக் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக கார்கேவுக்கு பதிலாக ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், ”எங்களுக்கு பல தலைவர்கள் உள்ளனர்.  ஆனால் முக்கிய தலைவர் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.  கார்கே ஜி நமது தேசியத் தலைவர்.  காங்கிரஸ் கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதில் கார்கேவுக்கு முக்கிய பங்கு உண்டு.” என அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  வங்கி மோசடி வழக்கு:  நீடிக்கப்பட்ட கோச்சர்களின் நீதிமன்ற காவல்...