இந்தியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பிடித்து அண்ணன் - தங்கை சாதனை!

இந்தியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பிடித்து அண்ணன் - தங்கை சாதனை!
Published on
Updated on
2 min read

ஒரு நிமிடத்தில் உலகத்திலுள்ள 57 முக்கிய நினைவுச் சின்னங்களின் பெயர்களை கூறி 6 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் - நிவேதா தம்பதிகளின் மகன் மிர்த்துன் ராஜ் மற்றும் மகள் ஷாக்ஷி ஆகிய இருவரும் சாதனை புரிந்து இந்தியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளனர். 

அதன்படி, முதல் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுவன் மிர்த்துன் ராஜ் ஒரு நிமிடத்தில் உலகத்தில் உள்ள 57 முக்கிய நினைவு சின்னங்களின் படத்தை பார்த்து, அதன் பெயர்கள் மற்றும் இருக்கும் இடத்தின் பெயர்களை கூறி சாதனை புரிந்துள்ளார். 

ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு ஒரு நிமிடத்தில் 54 முக்கிய நினைவு சின்னங்களின் பெயர்களை கூறியிருந்தது சாதனையாக இருந்த நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் ஒரு நிமிடத்தில் 57 முக்கிய நினைவு சின்னங்களின் பெயர்களை கூறி இந்தியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். 

இதேபோன்று, அவரது 2 வயது தங்கையான  ஷாக்ஷியும்  ஒரு நிமிடத்தில் பழம், காய், விலங்கு உள்ளிட்ட 70 பெயர்களை கூறி சாதித்துள்ளார். அண்ணன் தங்கை இருவரும் சாதனை புரிந்து இந்தியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். 

சிறுவர்களின் இந்த சாதனையை அங்கீகரித்து இந்தியா புக் ஆஃப் ரெகார்ட் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்ள்ளது. தொடர்ந்து, சிறுவர்கள் இருவரின் சாதனையை பெற்றோர்களும் உறவினர்களும் கேக் வெட்டி கொண்டாடினர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com