சைதாப்பேட்டையில் நடைபெற்ற 10 அம்ச பெருந்துறை முறையீடு....

சைதாப்பேட்டையில் நடைபெற்ற 10 அம்ச பெருந்துறை முறையீடு....

பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பெருந்துறை முறையீடு நடைபெற்றது.

பெருந்துறை முறையீடு:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தங்களுடைய நீண்ட நாள்  10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் சென்னை சைதாப்பேட்டையில் பெருந்துறை முறையீட்டில் ஈடுபட்டனர்.

ஒழுங்கு நடவடிக்கைகள்:

தங்களுடைய முக்கிய கோரிக்கைகளாக லஞ்ச ஒழிப்புத்துறை புகார் மனு தொடர்பான விசாரணைகளை அரசு நிர்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடித்திட வேண்டும் என்றும் மூன்று மாதங்களுக்கு முன்னரே ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2 மாதங்களுக்கு ஒரு முறை ஓய்வு ஊதிய குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்

பத்து அம்ச கோரிக்கை:

மேலும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்த வெளியிடப்பட்ட அரசாணை தாமதம் இன்றி அமல்படுத்த வேண்டும் என்றும் காப்பீடு அடையாள அட்டை உடன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் உட்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். 

கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டு மாதத்திற்கு ஒருமுறை உயர் அதிகாரிகளையும் மாவட்ட ஆட்சியர்களையும் சந்தித்து இந்த பிரச்சனை குறித்து முடிவு எடுக்க மன அளித்துள்ளோம் எனவும் கடந்த டிசம்பர் மாதம் அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் மனுக்கள் அளித்தும் அந்த மனுக்கள் மீதான பரிசீலனையும் இதுவரை நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார்.

புரியப்படவில்லை: 

ஓய்வு பெற்று அதற்கான பலன்களை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள் இன்னும் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது நாங்கள் ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்றோ அகவிலைப்படி உயர்த்தி தரவேண்டும் என்றோ கோரிக்கைகள் வைக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கவலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:   தலைமை செயலகத்தில் வைக்கப்பட்ட தகவல் பலகை....