ஒன்றோடு ஒன்றாக மோதிய 50 வாகனங்கள்.....

ஒன்றோடு ஒன்றாக மோதிய 50 வாகனங்கள்.....

சீனாவில் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹூனான் மாகாணத்தில் நேற்று முன் தினம் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அடுத்தடுத்து விபத்துக்குள்ளாயின.  இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்த நிலையில், இந்த விபத்தில் சிக்கி 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  

மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:  ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்... மன்னிப்பு கிடைக்குமா... மதத் தலைவர் கூறியதென்ன?!!