தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 இன்று காலை 10 மணிமுதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வேளாண் பட்ஜெட்டானது திமுக அரசால் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டாகும். சிலப்பதிகாரத்தின் ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ பாடலை மேற்கோள் காட்டி வேளாண்மையின் மகத்துவத்தை எடுத்துக் கூறி வருகிறார் அமைச்சர்.
கூடுதல் ஊக்கத்தொகை:
சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100 அதிகமாகவும், பொதுரகம் நெல் குவிண்டாலுக்கு ரூ.75 அதிகமாகவும் வழங்கப்படும்.
சிறுதானிய உணவகம்:
அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் 'மதி-பூமாலை' வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை.
5 லட்சம் பரிசு:
கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு.
மரங்கள் வெட்ட வழிமுறைகள்:
சந்தனம்,தேக்கு, செம்மரம் உள்ளிட்ட மதிப்புமிக்க மரங்கள் நன்கு வளர்ந்து பலன் தரும் சமயத்தில் அதை வெட்டுவதற்கான வழிமுறைகளை எளிதாக்க வனத்துறை மூலம் உரிய நடவடிக்கை.
வட்டார புத்தொழில் மையம்:
காவிரி டெல்டா விவசாயிகளுக்காக உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள். தஞ்சாவூரில் புதிய வட்டார புத்தொழில் மையம்.
வேளாண் தொழில் பெருந்தடம்:
காவிரி டெல்டா பகுதிகளில் திருச்சி –நாகை இடையே ‘வேளாண் தொழில் பெருந்தடம் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
கூடுதல் கட்டமைப்பு:
விழுப்புரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பரிவர்த்தனைக் கூடங்கள், உலர் களங்கள், சேமிப்புக் கிடங்குகள்.
பயிர்க் கடன்:
சாகுபடி பணிகளை சரியான காலத்தில் மேற்கொள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.14,000 கோடி பயிர்க்கடன்.
இதையும் படிக்க: ரூ.15 கோடியில் வாழை ஆராய்ச்சி நிலையம்.....!!!