தொடர் கனமழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்...இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் உயிரிழப்பு!

தொடர் கனமழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்...இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் உயிரிழப்பு!
Published on
Updated on
2 min read

குஜராத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

வட மாநிலங்களில் தற்போது பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலம் தபி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பல வீடுகளில் மழைநீா் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா். 

இதேபோல் ஹலோல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 4 குழந்தைகள் பாிதாபமாக உயிாிழந்தன. மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

மேலும் படன்வாவ் ஓசம் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் 3 போ் சிக்கி உயிருக்கு போராடினா். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரையும் கயிறு கட்டி உயிருடன் பத்திரமாக மீட்டனா். 

வதோதராவில் பெய்து வரும் தொடா் கனமழையால் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பொிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஹாியானாவில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் குருகிராமில் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. மேலும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனா். 

சண்டிகரில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் பொிதும் அவதிக்குள்ளாகியுள்ளனா். இதேபோல் டெல்லியின் சராய் கேல் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலசரிவு ஏற்பட்டது. மலையின் மீதிருந்து மண் சரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் இருநாட்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com