உலக அளவில் இரண்டாமிடம்....தமிழ்நாடு மாணவி சாதனை.....

உலக அளவில் இரண்டாமிடம்....தமிழ்நாடு மாணவி சாதனை.....
Published on
Updated on
1 min read

உலக அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் பழனியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி இரண்டாம் இடம் பிடித்து வெற்றி.

அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 2023 ஆம் ஆண்டு நடத்திய உலக அளவிலான ஓவியப் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து  25000 க்கு மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர்.  இந்த ஓவிய போட்டியில் இந்திய அளவில் ஒன்பது ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன.  அவற்றில் 10 முதல் 12 வயது பிரிவின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகா வரைந்த ஓவியம் இரண்டாம் இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

தேர்வாகியுள்ள ஒன்பது ஓவியங்களும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய வருட காலங்களில் அச்சிடப்பட்டு தேசிய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் வைக்கப்பட இருக்கிறது.  வெற்றி பெற்ற மாணவி தித்திகாவை பள்ளியின் தாளாளர் சாமிநாதன் முதல்வர் வசந்தா மற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com