காவிரியில் 2700 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்துள்ளது
காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 90வது கூட்டம் டெல்லியில் இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. வினீத் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுவை ஆகிய ,மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு ஏற்கனவெ 2600 கனஅடி நீர் தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான கால நிர்ணயம் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீர் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. வரும் நாட்களில் வினாடிக்கு 13,000 கன அடி நீர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள 17 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடகா உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் இறுதி வரை காவிரியில் 2700 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது