2 ஆண்டு திராவிட மாடல் ஆட்சி -முதலமைச்சர் ட்வீட் !!!

2 ஆண்டு திராவிட மாடல் ஆட்சி -முதலமைச்சர் ட்வீட் !!!
Published on
Updated on
2 min read

2 ஆண்டு திராவிட மாடல் அரசு 

2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே 7-ஆம் நாள் முதலே தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளின்படி ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது. இதனால், தமிழகத்தில் 2 ஆண்டு காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் திமுக ஆட்சி, அனைவருக்குமான வளர்ச்சியை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியாக நடந்து வருகிறது’ என்கின்றனர் ஆட்சியாளர்கள். இதையொட்டி அவர்கள் அடுக்கும் சான்றுகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அவர் இட்ட முதல் கையெழுத்தின் பயனாகத்தான் பெண்கள் இன்று பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகின்றனர். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்ணா பிறந்தநாளையொட்டி வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் மாதம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்துமுடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்துள்ளார். இவ்வாறு பெண்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

முதலமச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது.தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம்.திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும்!

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com