லாரி மோதிய விபத்தில் 2 பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு!

லாரி மோதிய விபத்தில் 2 பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு!

Published on

திருப்பூர் மாவட்டம் பள்ளகவுண்டபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு பள்ளி குழந்தைகள் உயிரிழந்தனர். 

திருப்பூரில் ஊத்துக்குளி அடுத்த பள்ளகவுண்டம் பாளையத்தை சேர்ந்த புவனேஷ் குமார் - சுமதி தம்பதிக்கு கனிஷ்கா, சஸ்விகா என்ற இரு மகள்கள். இருவரும் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். 

இந்நிலையில் இரு பிள்ளைகளும் தனது தாய்மாமனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com