சிவகங்கையில் 2 குழந்தைகளுக்கு டெங்கு - அதிரடி காட்டும் பேரூராட்சி நிர்வாகம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க வண்ணம் பேரூராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
சிவகங்கையில் 2 குழந்தைகளுக்கு டெங்கு - அதிரடி காட்டும்  பேரூராட்சி நிர்வாகம்
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் சின்ன தோப்பு தெரு, சின்ன பள்ளிவாசல் தெரு பகுதிகளில் குழந்தைகள் உட்பட சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பரவா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்புறவு ஆய்வாளர் அபுபக்கர் தலைமையில் வீட்டிற்கு வீடு நிலவேம்பு கசாயம் குடிநீர் வழங்கப்பட்டது.

அதோடு அப்பகுதியில் பயணிப்பவர்கள், வியபாரிகள் என சுமார் 200 நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் குடிநீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதிகளில் தூய்மை பணியும் மேற்கொள்ளப்பட்டது. அதோடு கொசு மருந்து அடித்தல் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்தல் என டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதோடு அப்பகுதிகளில் உள்ள வீடுகள், தெரு ஓரங்கள் முழுவதும் மருந்துகளும் தெளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் கவனஈர்ப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவும் துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் துப்புரவு மேற்பார்வையாளர் கவிதா, பரப்புரையாளர்கள் அருள்செல்வி, கலாவதி, குங்குமதேவி மற்றும் தூய்மை பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com