என்எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ம.க.வினர் 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதலில் அமைதியாக சென்ற போராட்டம், பாமக தலைவர் அன்புமணி கைதுக்கு பிறகு வன்முறையாக வெடித்தது. அதில் காவல் வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.
இந்நிலையில், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 28 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.