பட்ஜெட்2023:  15 முக்கிய அறிவிப்புகள்...!!

பட்ஜெட்2023:  15 முக்கிய அறிவிப்புகள்...!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

பட்ஜெட்டில் அறிவிக்கபட்ட முக்கிய அறிவிப்புகள்:

1.  முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை நான்கு வழி சாலை மேம்பாலம்.

2.  சோழப் பேரரசு புகழை உலகறிய செய்ய தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம்.  

3.  ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும். 

4.  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம்.

5.  மதுரை மாநகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறை.

6.  கோவையில் ரூ.172 கோடி செலவில் இரண்டு கட்டங்களாக செம்மொழி பூங்கா.

7.  தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சியின் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபைசேவைகள்.

8.  சென்னையின் முக்கிய ஆறுகளாகத் திகழும் அடையார் மற்றும் கூவம் ஆறுகளை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு.

9.  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.

10.  தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு வரும் செப்டம்பர் 15ஆம் நாள் முதல் மாதம் 1000 ரூபய் திட்டம் செயல்படுத்தப்படும்.

11.  நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவு கட்டணம் நான்கு சதவீதத்திலிருந்து இரண்டு சதவீதமாக குறைப்பு.

12.  அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்.

13.  சுற்றுலா துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சுற்றுலா கொள்கை.

14.  ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும் 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

15.  மாற்றுத்திறனாளிகளுக்கு மிதிவண்டி வழங்க 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com