முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில்...பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையை தெரிவித்த மா.சு..!

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில்...பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையை தெரிவித்த மா.சு..!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தற்போது வரை ஒரு கோடியே 35 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கடைசி நாள் பேரவைக்கூட்டம் :

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை அன்றைய தினம் ஆளுநர் உரையால் சர்ச்சையுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்று வந்த சட்டப்பேரவையின் கடைசி நாளாக இன்றும் சட்டப்பேரவை கூடியது. 

முதல் நிகழ்வு :

இதில் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மற்றும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ உக்கரபாண்டி ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வினாக்கள்  விடைகள் நேரம் தொடங்கியது.

மா.சுப்பிரமணியன் பதில் :

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஆயிரத்து 755 மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டம் செயல்பட்டு வருவதாகக் கூறினார். பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இதுவரை 77 லட்சம் பேர் மட்டுமே தகுதியுடையவர்கள் எனவும், அதில் 1 கோடியே 37 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அமைச்சர் மூர்த்தி பதில் :

இதைத்தொடர்ந்து சிதம்பரம் எம்.எல்.ஏ பாண்டியனின் கேள்விக்கு பதிலளித்த பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழ்நாட்டில் 100 ஆண்டுகள் பழமையான பதிவாளர் கட்டிடங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

செந்தில்பாலாஜி பதில் :

தொடர்ந்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தபின்னர் 316 துணைமின் நிலையங்கள் அமைக்க அரசாணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சேலம் மற்றும் ஆத்தூரில் மின்தேவை இருக்கும் பட்சத்தில் புதிய துணைமின் மண்டலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com