ஒமிக்ரான் பிஎப் 7 வைரஸ்: ஒரே நாளில்....தமிழகத்தில் உயர்ந்து வரும் எண்ணிக்கை...!

ஒமிக்ரான் பிஎப் 7 வைரஸ்: ஒரே நாளில்....தமிழகத்தில் உயர்ந்து வரும் எண்ணிக்கை...!
Published on
Updated on
1 min read

சீனாவில் பரவி வந்த உருமாறிய கோரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸ்:

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், அப்படியே படிபடியாக உயர்ந்து 2020 ஆம் ஆண்டு உலக நாடுகளையே அச்சறுத்தியது. அதைத்தொடர்ந்து, உலகம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களை கடும் நிதி சுமைக்கு ஆளாக்கியது. இந்த கொரோனா பேரிடர் காலத்தில் சிக்கி தவித்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் மீண்டும் கொரோனா உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவ தொடங்கியது. இப்படியே உருமாறி உருமாறி பரவி வந்த வைரஸ் கடந்த சில மாதங்களாக முற்றிலும் குறைந்து காணப்பட்டது. 

ஒமிக்ரான் பிஎப் 7:

ஆனால், தற்போது மீண்டும் உருமாறிய ஒமிக்ரான் பிஎப் 7 என்ற கொரோனா வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டு வேகமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டு வருகிறது. முதலில் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் மீண்டும் உருவெடுத்து வருவதால், தங்கள் நாடுகளுக்குள் வராமல் இருக்க அதற்கான முன்னேற்பாடுகளை உலக நாடுகள் செய்து வருகிறது.

இந்தியாவிலும் ஏற்பட்ட பாதிப்பு:

சீனாவில் பரவி வரும் ஒமிக்ரான் பிஎப் 7  வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவிலும்  பரவலாக காணப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து கடந்த 23-ஆம் தேதி இந்தியா திரும்பிய 40 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்ராவுக்கு வந்தவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எண்ணிக்கை உயர்வு:

இந்நிலையில், குவைத்தில் இருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனிமைப்படுத்த பட்டுள்ளதையடுத்து, தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com