அசத்திய தமிழ்நாடு: புதிய தேசிய கல்விக் கொள்கை வேண்டாம் என்பதற்கு இது போதும்!

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்ந்துள்ளது. 

அசத்திய தமிழ்நாடு:  புதிய தேசிய கல்விக் கொள்கை வேண்டாம் என்பதற்கு இது போதும்!

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக இந்தியா முழுவதும் AISHE சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்ந்துள்ளது தெரியவந்தது. மேலும், புதிய தேசிய கல்விக் கொள்கையில் 2030-ம் ஆண்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு 2019-2020-ம் கல்வியாண்டிலேயே 51.4%-ஐ எட்டியது. 2010-2011-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 32.9% ஆக இருந்த நிலையில் 10 ஆண்டுகளில் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. மேலும், நாட்டிலேயே உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 75.8% உடன் சிக்கிம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 

தமிழ்நாட்டுக்கு அடுத்த நிலையில் உத்தராகண்ட் மாநிலம் 41.5% உடன் 3-ம் இடத்தில் உள்ளது. 38.8% உடன் கேரளா 5-ம் இடத்தில் உள்ளது. அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதே உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை உயர காரணம் என்று கல்வியாளர்கள் கருத்து