'முதல்வர் ஸ்டாலின் அற்புதமா ஆட்சி செய்கிறார்',,புகழ்ந்து தள்ளும் சேகர் ரெட்டி.! 

'முதல்வர் ஸ்டாலின் அற்புதமா ஆட்சி செய்கிறார்',,புகழ்ந்து தள்ளும் சேகர் ரெட்டி.! 

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் மிக அற்புதமான ஆட்சி நடைபெற்று வருகிறது என தொழிலதிபர் சேகர் ரெட்டி கூறியுள்ளார். 

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை 2016ல் பிரதமர் மோடி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுவதாகவும் அவர் அறிவித்தார்.அப்போது பழைய நோட்டுகளை மற்ற முடியாமலும் புதிய 2000 ரூபாய் நோட்டு கிடைக்காமலும் மக்கள் அவதியுற்றனர்.

இந்த நிலையில் அரசியல் வட்டத்தில் நெருங்கிய தொழிலதிபரான சேகர் ரெட்டி பழைய நோட்டுகளுக்கு பதிலாக, வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னையில் இருக்கும் சேகா் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவரது வீட்டில் இருந்து பெட்டி பெட்டியாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

இது தொடா்பாக சேகா் ரெட்டி உள்பட அவரது நண்பா்கள் 6 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து மொத்தம், ரூ.24 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.அதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை கூறி சேகர் ரெட்டி விடுவிக்கப்பட்டார். இது அப்போது பெரும் சர்ச்சையானது. 

இந்நிலையில் தமிழகத்தில் திமுக அரசு பதிவியேற்றதும் சேகர் ரெட்டிக்கு மணல் குவாரிக்கு அனுமதி கொடுக்கப்பட உள்ளதாகவும், ரகசியமாக டீல் முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுவரை நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றது இல்லை என்றும் இனி வரும் காலங்களில் நானும், எனது நிறுவனமும் அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை என்றும் சேகர் ரெட்டி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் மிக அற்புதமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த சில நாட்களாக என்னை பற்றி சமூக ஊடகங்களிலும், சில பத்திரிகைகளிலும் எனக்கும் மற்ற சிலருக்கும் தமிழக அரசின் பொதுப்பணி துறையில் மணல் குவாரிகள் ஒப்பந்தம் கொடுத்ததாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். 

இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. நாங்கள் வாங்கியது இல்லை எனது பெயரிலோ, என் நிறுவனத்தின் பெயரிலோ கடந்த 15 வருடத்தில் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை இதுவரை எந்த ஒரு ஒப்பந்தமும் நாங்கள் பெற்றதில்லை. வேண்டுமென்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பொதுப்பணி துறையில் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். ஒப்பந்தம் பெறவில்லை கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழக அரசின் அனுமதி பெற்று மணல் கிடங்கு நடத்தி வந்தவர்களிடம் மணல் வாங்கி நாங்கள் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தோம். 

இதை தவிர நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றது இல்லை. இனி ஈடுபட மாட்டேன் இனி வரும் காலங்களிலும் நானும் எனது நிறுவனமும் தமிழக அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். எனவே, இதுபோன்ற செயல்களில் எனது பெயரை பயன்படுத்தி ஒரு பரபரப்பை உருவாக்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.