அரபிக் கடலில் கொந்தளிப்பு… அலையில் சிக்கி தத்தளித்த 146 பேர் மீட்பு.. மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!!

அரபிக் கடலில் கொந்தளிப்பு… அலையில் சிக்கி தத்தளித்த 146 பேர் மீட்பு.. மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!!

மும்பை அருகே அரபிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 146 பேரை இந்திய கடற்படையினர்  பத்திரமாக மீட்டுள்ளனர்.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ் தே’ புயல் நேற்று இரவு குஜராத் வழியாக கரையை கடந்தது. இதன் காரணமாக அரபிக் கடல் கடந்த 2 தினங்களாக மிகுந்த கொந்தளிப்புடன் காணப்பட்டது.  அலைகளின் சீற்றமும் மிகுதியாக இருந்தது.

இந்த நிலையில் மும்பை அருகே அரபிக் கடலில் பார்க் பி 305 என்ற கப்பல் கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்கள் கப்பல் கவிழ்ந்து  கடலில் தத்தளித்தனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டனர்.

அதன்படி தற்போது வரை கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 146 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.