12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான தடுப்பூசி பரிசோதனை: ஃபைசர் தொடக்கம்

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான தடுப்பூசி பரிசோதனையை அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான தடுப்பூசி பரிசோதனை: ஃபைசர் தொடக்கம்
Published on
Updated on
1 min read

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான தடுப்பூசி பரிசோதனையை அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதி ஃபைசர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துவதற்கான பரிசோதனையை அந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதில் சுமார் 4 ஆயிரத்து 500 குழந்தைகளை கொண்டு, 3 பிரிவுகளாக பிரித்து பரிசோதனையை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகள் ஒரு பிரிவாகவும், 2 முதல் 5 வயதுள்ள குழந்தைகள் ஒரு பிரிவாகவும், 6 முதல் 12 மாத பச்சிளம் குழந்தைகள் ஒரு பிரிவாகவும் பிரித்து பரிசோதிக்கப்பட உள்ளனர். முதல் பிரிவு அதாவது 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு 2 மற்றும் 3 ஆம் கட்ட ஆய்வை மேற்கொள்ள உள்ளதாகவும் இரண்டு மற்றும் 3 ஆம் பிரிவு குழந்தைகளுக்கு தடுப்பூசியின் அளவை குறைத்து வழங்கி 3ம் கட்ட பரிசோதனைகளையும் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com