ரகசிய திருமணம் செய்து கொண்ட இங்கிலாந்து பிரதமர்.... குவியும் விமர்சனங்கள்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது 56ஆவது வயதில் தனது காதலி ஹேரி சைமண்ட்ஸை கரம் பிடித்துள்ளார்.

ரகசிய திருமணம் செய்து கொண்ட இங்கிலாந்து பிரதமர்.... குவியும் விமர்சனங்கள்

33 வயதாகும் ஹேரி சைமண்ட்ஸ் உடன் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒன்றாக வாழ்ந்து வந்தார். இருவருக்கும் கடந்த ஆண்டு குழந்தை ஒன்று பிறந்தது. அதனைத் தொடர்ந்து திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் போரிஸ் ஜான்சன், கேரி சைமண்ட்ஸை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா காலம் என்பதால் லண்டனில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடைபெற்ற இருக்கலாம் என குறிப்பிடுகிறது .. அந்த நிகழ்ச்சியில் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கெனவே 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது . ஜான்சனுக்கு இது 3- வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது . போரிஸ் ஜான்சன் - ஹேரி சைமண்ட்ஸ் தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .