சீனாவில் மீண்டும் பரவும் புதுவகை நோய்- உலக நாடுகள் பீதி

சீனாவில் மீண்டும் பரவும் புதுவகை நோய்- உலக நாடுகள் பீதி

சீனாவில் முதன்முறையாக உருமாறிய பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


சீனாவில் உருவான கொரோனா வைரசின் அலைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அங்கு உருமாறிய பறவைக் காய்ச்சலுக்கு முதல்முறையாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். ஜியாங்சு மாகாணத்தின் ஜென்ஜியாங் நகரை சேர்ந்த 41 வயதுடைய அந்த நபரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த பறவைக்காய்ச்சல், கோழிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியதாகவும், ஆனால் தொற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள நபர் கடந்த 28-ந் தேதி, H1ON3 ஏவியன் இன்புளூவென்சா வைரஸ் பாதிப்புக்கு ஆளானதாகவும், ஆனால் இதுவரை உலகில் வேறு யாரும் இந்த வகை பறவைக் காய்ச்சலுக்கு ஆளானது இல்லை என்றும் சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இது கோழிப்பண்ணையில் இருந்து உருவாகக்கூடிய வைரஸ் என்றும், ஒப்பீட்டளவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாத வகை என்றும், பெரிய அளவில் பரவுவதற்கான ஆபத்து குறைவு என்றும் சொல்லப்படுகிறது.