Hey என் கோலி சோடாவே... அமெரிக்காவில் தனுஷ்... வைரல் புகைப்படம்

தனுஷின் லேட்டஸ்ட் அமெரிக்கப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Hey என் கோலி சோடாவே... அமெரிக்காவில் தனுஷ்... வைரல் புகைப்படம்
Published on
Updated on
1 min read

தனுஷ் தற்போது தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிறக்கக் அமெரிக்காவில் இருக்கிறார். அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது. 

அந்தப் படத்தில் நடிகர் தனுஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் தனுஷ்.

தற்போது தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதால் இன்னும் இரண்டு வாரங்களில் தனுஷ் சென்னை திரும்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது தனுஷ் அமெரிக்காவின் ஒரு ஹோட்டலில் உணவருந்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் Hey என் கோலி சோடாவே என நினைவுகூர்ந்த மொமெண்ட் என தனுஷ் பதிவு செய்திருந்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com