பிச்சை எடுப்பதில் அதிக பணம் கிடைக்கிறது! எங்கல விட்டுடுங்க, முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்!!

நாகர்கோவில் பகுதியில் பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், வடலிவிளை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆதரவற்றவர்களுக்கான தற்காலிக முகாம் அமைத்துள்ளனர். இங்கு நாகர்கோவில் பகுதிகளில் ஆதரவின்றி தவித்து வருபவர்களை அழைத்துச் சென்று தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

அதை தொடர்ந்து நாகர்கோவில் காவல்துறை ஆய்வாளர் சாம்சன் தலைமையில், அப்பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்தவர்களை அழைத்து சென்றனர். அப்போது ஒவ்வொருவரும் கையில் கத்தை கத்தையாக பணம் வைத்திருந்தனர். மேலும் காவல்துறையினர் காலில் விழுந்து, தங்களை விட்டு விடும்படி கெஞ்சினர்.

ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றவர்களை முகாம்களில் தங்க வைக்க உதவி செய்து வரும் நிலையில், பலர் பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவது அதிர்ச்சிக்குள்ளாக்கியது