மலை வாழ் மக்களின் வீட்டை உடைத்து திருடிய காவல்துறையினர்,.! உதவி ஆய்வாளர் உட்பட மூவர் சிக்கினர்.!  

மலை வாழ் மக்களின் வீட்டை உடைத்து திருடிய காவல்துறையினர்,.! உதவி ஆய்வாளர் உட்பட மூவர் சிக்கினர்.!  

ரெய்டு சென்ற காவல்துறையினர்  பீரோக்களை உடைத்து 8.5 லட்சம் ரூபாய் மற்றும் 15 சவரன் நகைகள் எடுத்து வந்தபோது கிராம மக்கள் அவர்களை மடக்கி பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர். 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரு மலையில் உள்ள நச்சுமேடு கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த  தகவல் அடிப்படையில் அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் 4 போலீசார் சாராயம் இருப்பதாக கூறப்பட்ட இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீடுகளுக்கு சென்றனர்,

ஆனால், அவர்கள் அந்த வீட்டிற்கு சென்றபோது இளங்கோ மற்றும் செல்வம்  ஆகியோர் அந்த வீட்டில் இல்லை. எனவே அந்த வீட்டில் உள்ளே நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 8.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு மலையை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.

சாராயம் காய்ச்சுவதை தடுப்பதற்காக வந்த காவல்துறையினர் பீரோவை உடைத்து தங்க நகைகளை  எடுத்துக் கொண்டு செல்வதை அறிந்த அவ்வூர் மக்கள் அவர்களை மடக்கிய அப்பகுதி கிராம மக்கள் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் பணம் வைத்திருந்த பையிலிருந்து பணத்தை காவல்துறையினர் மூலமாகவே எடுத்துக் கொடுக்க வைத்தனர்.

அதன்பின்னர் அரியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வீடு புகுந்து பணத்தை எடுத்து வந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். உடனே இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறை உதவி கண்காணிப்பாளர் காவல்துறையினர் மற்றும் மலை கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு அறியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவலர்கள் இளையராஜா யுவராஜ் ஆகிய மூவர் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மலைப்பகுதியில் சாராய ரெய்டுக்கு வரும் காவல்துறையினர் தொடர்ந்து இதுபோன்ற பணங்களை வீட்டிலிருந்து எடுத்துச் செல்வது தொடர்கதையாக உள்ளதாகவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.